தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை (மார்ச் 25) முதல் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிசான சாகுபடி முடிந்த நிலையில், கோடை காலம் தொடங்குவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். இம்மாத இறுதியில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாக வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.