கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜன.11) பாஜகவின் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்துகொண்டார். அப்போது பேசிய தமிழிசை, “நாம் வந்ததும் சூரியன் காணாமல் போனது. மழை வந்தால் குளங்கள் நிரம்பும், அப்போது தான் தாமரை மலரும். கைகள் உயர்கிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும்” என்றார்.