தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலங்களை விட சமூகநீதி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு படிப்படியாக நிறைவேற்றும். அரசு வீடு கட்டும் மதிப்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதை வரவேற்கின்றேன். அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.