விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் காரை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தூரம் துரத்திச் சென்று தவெகவினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜகவிலிருந்து தவெகவில் இணைந்ததற்காக எச்.ராஜா தங்களைத் திட்டியதாகக் கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: பாலிமர்