தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் தானாக வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் இன்று (அக்.12) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக கூட்டத்திற்கு தவெக தொண்டர்கள் வருகின்றனர். முறையாக தலைமையிடம் ஆணை பெற்று தான் வரவேண்டும் என அறிவுறுத்தினோம். இருந்தபோதிலும் அவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். இதனை எதிர்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.