அர்ஜுன் நடிப்பில் தினேஷ் லட்சுமணன் எழுதி இயக்கியுள்ள 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (நவ., 13) மாலை வெளியிடப்படவுள்ளது. இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வரும் 21ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அர்ஜுன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.