போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி வெனிசுலா மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, வெனிசுலா நாட்டிற்குள் புகுந்து, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை கைது செய்த அமெரிக்க படைகள் நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும். புதிய ஆட்சி அமையும் வரை வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அமெரிக்காவால் வெனிசுலா மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.