“முதலமைச்சர் விஜயை கோழை என விமர்சித்தவர் வன்னிஅரசு”.. எஸ்ஜி சூர்யா

10பார்த்தது
“முதலமைச்சர் விஜயை கோழை என விமர்சித்தவர் வன்னிஅரசு”.. எஸ்ஜி சூர்யா
தவெக கூட்டணியில் அமைச்சராக பதவியேற்ற வன்னிஅரசு-க்கு பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்ஜி சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், “விஜயை ஊழல்வாதி என்று பக்கம் பக்கமாக அறிக்கை விட்டீர்கள். அந்தப் பதிவின் இறுதியில் நடிகர் விஜயின் ஊழல் கதை தொடரும் என்றும் சீறியிருந்தீர்கள். ஆனால் இன்று அதே விஜயின் அமைச்சரவையில் பவ்யமாக அமைச்சர் பதவியை ஏற்றுள்ளீர்கள். அமைச்சர் பதவி கிடைத்தவுடன் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி