உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS பாதுகாப்பு & பாதுகாப்பு தீர்வுகள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டதாகும். மேலும், சாதார போர் விமானங்களை போல இந்த விமானத்தை இயக்க ரன்வே கூட தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது.