தென்காசி மதிமுக அலுவலகத்தில் நுழைந்து பொருட்களை திருடிச் சென்றதாக கூறி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மதிமுக வழக்கறிஞர் அ.சுப்பையா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். தவெக கூட்டணியில் மதிமுக இணைந்ததை எதிர்த்து மதிமுகவில் இருந்து விலகி ராஜேந்திரன் திமுகவுடன் இணைந்த நிலையில், மதிமுக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ராஜேந்திரன் கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.