
மணிப்பூரில் இணைய சேவைக்கு 5 நாள் தடை: பதற்றம் நீடிக்கிறது
மணிப்பூர் உக்ருல் மாவட்டத்தில் குகி–நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, மாநில அரசு ஐந்து நாட்களுக்கு இணையச் சேவைகளை தடை செய்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டு யும்நாம் கெம்சந்த் சிங் முதல்வராக பதவியேற்ற நிலையில் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. டங்குல் நாகா சமூக வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், லிட்டன் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.






























