Mar 09, 2026, 04:03 IST/ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி
கம்பம் 11. 5 கிலோ புகையிலைப் பொருட்களுடன் ஒருவர் கைது
Mar 09, 2026, 04:03 IST
கம்பம் வடக்கு போலீசார் சட்டவிரோத புகையிலை விற்பனை தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்குப்பையுடன் நின்ற கருப்பையா (45) என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் 11.629 கிலோ புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, கருப்பையா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.