ஆண்டிபட்டி குமாரபுரம் மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பைக்கில் வந்த அமர்தராஜ் மற்றும் ராம்குமார் ஆகியோரை சோதனையிட்டபோது, அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் (Tapentadol) பறிமுதல் செய்யப்பட்டன. ஆன்லைனில் வாங்கி லாபத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.