தேனி அருகே கார் மோதி விபத்து.. 3 பேர் பலி

579பார்த்தது
தேனி அருகே கார் மோதி விபத்து.. 3 பேர் பலி
தேனி க. விலக்கு அருகே அஜித் குமார் என்பவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (75), செல்வம் (50), மாரியம்மாள் (50) ஆகியோர் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். பாக்கியலட்சுமி (39) சிகிச்சை பெற்று வருகிறார். தேனி க. விலக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, கார் ஓட்டுநர் அஜீத்குமாரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி