தேனி மாவட்டம் குமுளி அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாகன தணிக்கையின் போது, மதுரையிலிருந்து கேரளா சென்ற காரில் இருந்து 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வி (47), முனியசாமி (36), பாலசுப்பிரமணி (38) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 1.18 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.