கம்பம் நகரில் கம்பம் மெட்டு காலனி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் மஜிதே தவ்ஹீத் மர்கஸ் பள்ளிவாசல் சார்பாக ஏராளமான முஸ்லிம்கள் அதிகாலை முதலே எழுந்து புத்தாடைகளை உடுத்தி இதுல் அல்ஹா என்னும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.