சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரகுபதி, வயிற்று வலிக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணமாகாததால் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுபதி உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.