போடியில் இருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பேருந்து ஆண்டிபட்டி அருகே எதிரே வந்த கார் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 50 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் வந்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.