தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபகேசன் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் ஆண்டிபட்டி வட்டார வழங்கல் அலுவலர் காசிநாதன் உடனிருந்தார்.