தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் மேகமலை அருவியில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் உள்ள படிக்கட்டுகள், நடந்து செல்லும் பாதைகள் மற்றும் குளிக்கும் பகுதிகள் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் 33வது நாளாக தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.