குமுளி செல்லும் சாலையில் சரக்கு வாகனம் மீது பஸ் மோதி விபத்து

0பார்த்தது
குமுளி செல்லும் சாலையில் சரக்கு வாகனம் மீது பஸ் மோதி விபத்து
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் (24) என்பவர் தனது சரக்கு வாகனத்தில் பிஸ்கட் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பாசில்கான் என்பவருடன் கூடலூர் நோக்கி நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது, குமுளியிலிருந்து ராஜேஷ் ஓட்டி வந்த சொகுசு பஸ், சரக்கு வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி