தேனி: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

1பார்த்தது
தேனி: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
நேற்று (நவ. 2) தேனி சாலையில் பராமரிப்பிற்காக கொண்டு வரப்பட்ட கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. மதுரையில் கார் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் தேனியைச் சேர்ந்த ஜோதிராஜசேகரன் என்பவர் சோதனைக்காக காரை தேனிக்கு எடுத்து வந்தபோது இந்த விபத்து நேரிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி