தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

பெரியகுளம் பகுதியை சேர்ந்த திவ்யா, வசீகரன் என்பவரின் தாயாருக்கு கடன் கொடுத்திருந்தார். கடனை திருப்பி செலுத்தியும், வசீகரன் மேலும் பணம் கேட்டு திவ்யாவிடம் தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரது வீட்டில் இருந்த வைக்கோலுக்கு தீ வைத்துள்ளார். இது தொடர்பாக பெரியகுளம் போலீசார் வசீகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
