சின்னமனூர்: திமுக பிரமுகர் உட்பட இருவர் ஆம்னி பேருந்து மோதி பலி

0பார்த்தது
சின்னமனூர்: திமுக பிரமுகர் உட்பட இருவர் ஆம்னி பேருந்து மோதி பலி
சின்னமனூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டி (36), தோழி வைத்தீஸ்வரி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, உத்தமபாளையம் புறவழிச் சாலையில் கம்பத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இதில் வைத்தீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திமுக பிரமுகர் செல்லப்பாண்டி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் முருகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி