குமுளி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
சபரிமலை சீசன் நெருங்குவதையொட்டி, குமுளியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உத்தமபாளையம் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர். இப்பேருந்து நிலையம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
