கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தென் மண்டல காவல் அதிகாரி மாநில எல்லைச் சோதனைச் சாவடியான குமுளியில் ஆய்வு நடத்தினார். வாகனங்களை முறையாகச் சோதனை செய்வது மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை தீவிரமாகக் கண்காணிப்பது குறித்து காவலர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா உடனிருந்தார்.