தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பரப்புரையில் ஈடுபட்டார். திமுக ஆட்சி தொடர்வதற்கு தனக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.