தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டில் திமுக மற்றும் தேமுதிக கூட்டணி அமைக்கப்பட்டதை முன்னிட்டு, இரு கட்சி சார்பில் உற்சாகக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.