ஆண்டிபட்டி அருகே மதுப்பழக்கத்தால் முதியவர் தற்கொலை

60பார்த்தது
ஆண்டிபட்டி அருகே மதுப்பழக்கத்தால் முதியவர் தற்கொலை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட கடமலைக்குண்டு அருகே சிறப்பாறை பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில் அதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 18-ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி