ஆண்டிப்பட்டி கதிர்நரசிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வீரணன் (65) ராஜதானி சாலையில் பைக்கில் சென்றபோது, வேகத்தடை காரணமாக பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் வீரணன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.