கூடலூர்: தொழிலாளியைக் கொலை செய்த நண்பர் கைது

85பார்த்தது
கூடலூர்: தொழிலாளியைக் கொலை செய்த நண்பர் கைது
கூடலூரைச் சேர்ந்த கணேசன் மகன் கலைக்கண்ணன் (49). அதே பகுதியைச் சேர்ந்த காளப்பன் மகன் முருகன் (41). நண்பர்களான இருவரும் கூலித் தொழிலாளிகள். லோயர்கேம்ப் அருகே வெட்டுக்காடு பகுதியில் உள்ள கே.கே. பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவரது தோட்டத்துக்கு இருவரும் வேலைக்குச் சென்றனர். அங்கு இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதில் கணேசன் இரும்புக் கம்பியால் கலைக்கண்ணனை தாக்கி, அங்குள்ள அறைக்குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தோட்டத்துக்கு வந்த உரிமையாளர் மகேஷ் அறையைத் திறந்து பார்த்தபோது கலைக்கண்ணன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குமுளி போலீசார் சென்று உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி