கம்பம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு மணி நேரமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. பகல் நேரங்களில் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மழையால் மேம்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.