வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியாக குறைந்துள்ளதால், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான அளவு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.