கம்பம் சுருளி அருவி நீர்வரத்து சுத்தமாக குறைந்தது

0பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து முற்றிலும் நின்று அருவி வறண்டு வெறும் பாறையாக காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையினால் ஆர்ப்பரித்த அருவியில், தற்போது நீர் இல்லாததால் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.