கம்பம் நகரில் பைபாஸ் ரோடு அருகே வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் வசீகரன் (21) என்பவர் கஞ்சாவை ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வசீகரனை காவலர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.