தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட கடமலைக்குண்டு அருகே நரியூத்து பகுதியில் குடும்பப் பிரச்சனையில் மாரிமுத்து என்பவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்,
அப்போது அவர் மற்றும் மனைவி மகள் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்