ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வீரணன், ஈச்சம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்து நாடார் பள்ளி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ராஜதானி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.