கூடலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது

456பார்த்தது
கூடலூரில் மக்கள் மன்றம் சார்பில், பென்னிகுவிக் அவர்களின் 185வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாகவும், விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் வரை 8 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்ட இந்தப் போட்டியில், தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி