தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில், கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தொடங்கி வைத்தார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.