தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்று புதிதாக ஆதார் பதிவு மையம் திறக்கப்பட்டது. ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ரிப்பன் வெட்டி இந்த மையத்தை திறந்து வைத்தார். மேலும், ஆதார் பதிவு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பெஞ்சமின் ஜேசுதாஸ், செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.