தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் சக்கம்பட்டியில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இன்று (அக். 10) ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார். உடன் பேரூர் செயலாளர் சரவணன் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.