தேனி மாவட்டம், கம்பம் சிக்னல் அருகே உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நிமிர்ந்து நில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாமை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.