மயிலாடும்பாறை அருகே தென்பழனி காலனி பகுதியில் மயிலாடும்பாறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஏற்கனவே லாட்டரி சீட்டு விற்பனை வழக்கில் உள்ள இருளப்பனை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் இருளப்பன் தனது வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களுக்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து மயிலாடும்பாறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.