ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜு (70). இவர் மே 18 அன்று ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்த கார் ராஜு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.