பெரியகுளம்: காதலனுடன் தகராறு; பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை

571பார்த்தது
பெரியகுளம்: காதலனுடன் தகராறு; பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை
பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் சக்தி மாரியம்மாள் (30) என்ற பெண், தனது காதலன் ராஜாவுடன் ஏற்பட்ட தகராறில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சக்தி மாரியம்மாள், திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்தபோது ராஜா வந்து தகராறு செய்துவிட்டு சென்றார். பின்னர் அவரை வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you