கம்பம் அருகே காமயகவுண்டனபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கருமாரிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இப்பிரச்சினைக்கு பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பெண்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கம்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.