தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் கடத்தி வருகின்றனர். உடனடியாக மணல் திருட்டை தடுத்து மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.