கம்பம் அருகே தந்தைக்கு அரிவாள் வெட்டு.. மகன் கைது

644பார்த்தது
கம்பம் அருகே தந்தைக்கு அரிவாள் வெட்டு.. மகன் கைது
கம்பம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஈஸ்வரன் என்பவரின் மகன் சச்சின் (25) தீராத குடிப்பழக்கத்தால் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சச்சின், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அறிவாளால் தாக்கியுள்ளார். இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் சச்சினை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி