ஆண்டிபட்டி, கொண்டம நாயக்கன்பட்டியில் உள்ள பகவதியம்மனுக்கு இன்று காலை 6.30 மணிக்கு தீபாராதனையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பூ அலங்காரத்துடன் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஒரு சில பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.