தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 'சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றன. கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.